Amila Terzimehic Vivegam Press Release

0
216
Vivegam Press Release

The core cast of any mega action movies is so very vital for its success. It becomes even more important for an international spy movie like Vivegam which has been made on a humongous scale. Vivegam starring Ajith Kumar, Kajal Agarwal, Vivek Oberoi and Akshara Hassan is directed by Siva and produced by Sathya Jyothi films. Amila Terzimehic, who has played the role of one of the core member of ‘Counter terrorist squad’ headed by Ajith Kumar in the movie opens up about the mega project which is all set to release on August 24th. Amila Terzimehic says, ” Its a great honour to be stepping into Indian cinema through a true international film like ‘Vivegam’. I thank director Siva for giving me this opportunity. He has seen my performance in my Hollywood movie ‘The November man’ starring legendary Pierce Brosnan, and gave me this role in ‘Vivegam’ which not only required good acting skills but also great fighting skills. I was so satisfied when director Siva told me the movie’s plot and my role since I love watching and doing hardcore action movies. Even before meeting Ajith i came to know how big a star he is in Indian cinema and was expecting him to be so full of himself just like any super star. But to my surprise he was so simple, humble and is the most professional actor I have ever worked with so far . He is such a complete actor and does even the riskiest stunts all by himself. He has eyes of a 6 year old boy , so full of goodness and positivity in him. I want the same approach to this job and this world as him. ‘Inspiration’ is the one word to describe him. The whole ‘Vivegam’ crew was so professional and full of positivity. I am sure Indian audience are going to love and celebrate ‘Vivegam’in a massive way “.

எந்த ஒரு பிரம்மாண்ட ஆக்ஷன் படத்தின் வெற்றிக்கும் பின்னால் அந்த படத்தின் பிரதான ஸ்க நடிகர்கள் ஒரு முக்கிய பங்களிப்பர். ‘விவேகம்’ போன்ற ஒரு உலகத்தரம் வாய்ந்த சர்வதேச உளவு படத்திற்கு சக நடிகர்கள் மேலும் முக்கியமாவார்கள் ஆவார்கள் . அஜித் குமார், காஜல் அகர்வால், விவேக் ஓபராய் மற்றும் அக்ஷரா ஹாசன் நடிப்பில், சிவா இயக்கத்தில், சத்ய ஜோதி பிலிம்ஸின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள ‘விவேகம்’ ஆகஸ்ட் 24 அன்று உலகம் முழுவதும் மிக பெரிய அளவில் ரிலீஸாகவுள்ளது. இப்படத்தில் அஜித் குமாரின் ‘கவுண்டர் டெரரிஸ்ட் ஸ்க்வாட்’ அணியின் ஒரு அங்கமாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஹாலிவுட் நடிகை அமிலா டெர்ஜிமெஹிக் [ Amila Terzimehic ] . இது குறித்து அமிலா டெர்ஜிமெஹிக் பேசுகையில், ” ‘விவேகம்’ போன்ற ஒரு உண்மையான உலகத்தரம் வாய்ந்த சர்வதேச படத்தின் மூலம் இந்திய சினிமாவில் நான் கால் பதிப்பது எனக்கு பெரிய பெருமை. இந்த வாய்ப்பினை எனக்களித்த இயக்குனர் சிவாவிற்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். ஹோலிவுட்டின் உச்ச நட்சத்திரம் பியர்ஸ் பிராஸ்னன் கதாநாயகனாக நடித்த ‘தி நவம்பர் மேன்’ படத்தில் நான் செய்திருந்த கதாபாத்திரத்தை பார்த்த இயக்குனர் சிவா ‘விவேகம்’ பட வாய்ப்பினை எனக்களித்தார் என அறிந்தேன். விவேகத்தில் எனது நடிப்பு மட்டுமின்றி ஆக்ஷன் காட்சிகளில் கடின சண்டை போடும் திறனும் தேவைப்பட்டது .ஆக்ஷன் படங்களின் ரசிகையாக எனக்கு இயக்குனர் சிவா கூறிய ‘விவேகம்’ படத்தின் கதையும், அதில் எனது கதாபாத்திரமும் மிகவும் பிடித்திருந்தது. அஜித் குமாரை முதல் முறையாக சந்திப்பதற்கு முன்னரே அவர் இந்திய சினிமாவில் எவ்வளவு பெரிய நட்சத்திரம் என்பதை தெரிந்துகொண்டேன். ஆனால் சந்தித்தபொழுது துளி கூட தலைக்கனம் இல்லாமல் அவ்வளவு எளிமையாக மனிதராக எல்லோருடனும் பழகினார். அவருடைய தொழில் பக்தி நான் இதுவரை வேறெந்த நடிகரிடமும் பார்த்ததில்லை. எல்லா ஆபத்தான சண்டை கட்சியையும் டூப் வேண்டாம் என்று தானே செய்து அசத்தினார். இவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் இன்னமும் அவரது கண்களில் ஒரு சிறுவனின் துள்ளலும் பாசிட்டிவிட்டியும் உள்ளது . எனது சினிமா வாழ்க்கையும் இந்த உலகத்தையும் அவரது கண்ணோட்டத்திலேயே கண்டு வாழ விரும்புகிறேன். மற்றவர்களுக்கு உத்வேகம் தருவதில் அவருக்கு நிகர் அவரே. ‘விவேகம்’ படத்தின் ஒட்டுமொத்த குழுவும் மிகுந்த தொழில் பக்தியுடன் பெரிய அளவில் உண்மையாக உழைத்தது. இந்திய சினிமா ரசிகர்கள் ‘விவேகம்’ படத்தை நிச்சயம் மாபெரும் வகையில் ரசித்து கொண்டாடுவார்கள் என உறுதியாக சொல்லுவேன்.” என்றார்.

Amila Terzimehic Vivegam Press Release

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here